.:!:. குறிஞ்சி மலர் - Kurinji Malar .:!:.

"கற்போம் கற்பிப்போம்.. கல்வியின் சிறப்பு கரும்பின் இனிப்பு" - சான்றோர்

தேர்தல் 2011 [தமிழ்நாடு, புதுச்சேரி] - ELECTION 2011 [Tamilnadu, Puducherry]

நீண்ட நாளுக்கு பிறகு என்னுடைய பதிவினை தொடருகிறேன்... தேர்தல் திருவிழா 2011, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெற்று மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகின...இதில் வெளியான இரு மாநில முடிவிகளும் எதிர்பார்த்த படியே இருந்தது... மக்கள் மாற்றத்தை விரும்பி, ஊழலை எதிர்த்து ஆட்சியை மாற்றி எழுதி இருந்தனர்...
தமிழ்நாடு 
234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு, ஆளும்கட்சியாம் தி.மு.க வை நீக்கி அ.தி.மு.க வை வெற்றி பெற செய்துள்ளனர்... இதில் அ.தி.மு.க கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி உள்ளது...
அ.தி.மு.க- 150 [160]
தே.மு.தி.க- 29 [41]
மற்றவை- 24 [33]

மொத்தம் - 203 [234]

மேலும் தி.மு.க வெறும் 31 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது...

தி.மு.க- 23 [119]
காங்கிரஸ் - 05 [63]
மற்றவை- 03 [52]

மொத்தம் - 31 [234]

இதன்படி செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வர் ஆக போவது உறுதி...


புதுச்சேரி 


என்.ஆர்.காங்கிரஸ் - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி : 
புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. புதிய முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக உள்ள காங்., கட்சி, தி.மு.க., - பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து போட்டியிட்டது. காங்., கட்சியில் இருந்து வெளியேறி, அகில இந்திய என்.ஆர்.காங்., என்ற புதிய கட்சியை துவக்கிய ரங்கசாமி, அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். காங்., கட்சி 17 தொகுதிகளிலும், தி.மு.க., 10, பா.ம.க., 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

காங்., கட்சிக்கு இணையாக, என்.ஆர்.காங்., கட்சியும் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க., 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூ., - தே.மு.தி.க., ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன. தேர்தலில் காங்., கூட்டணிக்கும், என்.ஆர்.காங்., கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், என்.ஆர்.காங்., கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைகிறது. புதிய முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்கிறார். ஏற்கனவே, முதல்வராக ரங்கசாமி இரு முறை பதவி வகித்துள்ளார். தற்போது, மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

30 தொகுதிகளின்  வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் :

என்.ஆர்.காங்கிரஸ்., கூட்டணி
என்.ஆர்.காங்., - 15
அ.தி.மு.க., - 5

காங்கிரஸ் கூட்டணி
காங்., - 7
தி.மு.க., - 2

சுயேச்சை - 1


இரண்டு தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி:


புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இந்திரா நகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்.,வேட்பாளர் ஆறுமுகத்தை விட, ரங்கசாமி கூடுதலாக 16,677 ஓட்டுகள் பெற்றார். கதிர்காமம் தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை விட, ரங்கசாமி 9,757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆன்மிகத்தில் ஆழ்ந்திருந்த ரங்கசாமி:

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, ரங்கசாமி ஆன்மிகத்தில் ஆழ்ந்திருந்தார். ஓட்டு எண்ணிக்கையொட்டி, அகில இந்திய என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி வீடு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலை 4 மணிக்கே ரங்கசாமியின் வீட்டு முன் தொண்டர்கள் குவிய துவங்கினர். கதிர்காமத்தில் உள்ள கதிர்வேல் சுவாமி கோவில், காளியம்மன் கோவில், வலம்புரி விநாயகர் கோவில்களுக்கு ரங்கசாமி நேற்று காலை சென்று வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.

தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கியவுடன், ரங்கசாமி வீட்டில் உள்ள "டிவி'க்களில், தேர்தல் முடிவு நிலவரங்களை தொண்டர்கள் ஆரவாரத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலி வீட்டு கீழ்தள "டிவி' அறையில் தொண்டர்களுடன் அமர்ந்து, ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகளை கவனித்து கொண்டிருந்தார். கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட போது, உற்சாகமாக கட்டை விரலை உயர்த்தி கட்சி தொண்டர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

ரங்கசாமியோ "டிவி' ஏதும் பார்க்காமல் வீட்டு மேல்தளத்தில், அப்பா பைத்தியம் சுவாமி உருவ படத்திற்கு அருகே, நாற்காலியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார். தொண்டர்கள் அவ்வபோது ரங்கசாமியிடம் சென்று தொகுதி நிலவரங்களை விவரித்து கொண்டிருந்தனர். ஆனால், ரங்கசாமி பதில் ஏதும் கூறாமல், அப்பா பைத்திய சுவாமிகள் படத்தை பார்த்தபடி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். என்.ஆர்.காங்., கூட்டணி 20 இடங்களில் அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். ஆனால், ரங்கசாமி வழக்கம்போல் அமைதியாக, அப்பா பைத்திய சுவாமிகளை நினைத்தபடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்..

அவர் பிராத்தனையும், எங்கள் பிராத்தனையும் வீண் போகாமல் 
தலைவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளது...
ந.ரங்கசாமி வாழ்க பல்லாண்டு..
உங்கள் சேவை புதுவைக்கு தேவை 

இவன்
உங்கள் நல்லாட்சியை 
என்றும் விரும்பும் 
புதுவை வாழ் குடிமகன் 
இர. வெங்கடேஷ் MSc, HDCA
[கணினி மென்பொருள் பொறியாளர்
 [லாசுபேட்டை சட்டமன்ற தொகுதி]


Page Hitz

My Another Blog

My Another Blog
Maha Chudar - My Another random flavours blog about Information Technology and Indian Art & Culture

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்

Search Here..

My Followers

FACEBOOK

About Me

My photo
Lawspet, Puducherry, India
Completed MSc Computer Science (2008-2010) at Pondicherry University. Now Working as Smart Card PC/SC Appliction Developer in Pondicherry.

Find Me in FaceScraps

Follow Me At Face Scraps Social Network

Popular Posts

Facebook Like:

World Famous

free counters

Traffic

Revolver Maps